[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தானது மேலும் 4 வாரங்களுக்குத் தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

chennai-hc-adjourns-plea-against-cancellation-of-local-body-polls-for-four-weeks

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 25ஆம் தேதி ரத்து செய்தது. அதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. குமார் ஆஜராகி தனி நீதிபதியின் உத்தரவால் மாநில தேர்தல் ஆணையத்தின் பணி முடங்கியுள்ளதால், உத்தரவை ரத்து செய்து தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாநில அரசு செய்ய வேண்டிய வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருப்பதும், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்பதையும், சட்டத்திருத்தம் இயற்றிய பிறகே செயல்படுத்த முடியும் என்றும் வழக்கறிஞர் பி.குமார் தெரிவித்தார். 

சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம் தேவை என அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்‌வதாக தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக வழக்கறிஞர் வாதிடுகையில் 'குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் பங்கேற்றக்கூடாது என்பதை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதனை உள்ளாட்சி தேர்தலிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தனி நீதிபதியின் உத்தரவு. ஆளும்கட்சிக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு முரண்பாடு உள்ளது' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டுமா? நீதிமன்றம் நடத்த வேண்டுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், திமுகவும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close