[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

உள்ளாட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

chennai-high-court-asks-councillors-to-participate-in-local-body-meetings

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் அலுவல் சார்ந்த கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், மாநகராட்சி சட்டத்தின்படி, மூன்று கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காமல் உள்ள கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி, மூன்று கூட்டங்களுக்கு மேல் பங்கேற்காத கவுன்சிலர்கள் எவரும் இல்லை என கூறியிருந்தது.

இதை ஏற்றுகொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு மாநகராட்சி கூட்டமாக இருந்தாலும், மண்டலக் கூட்டமாக இருந்தாலும் அதில் கவுன்சிலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவ்வாறு கலந்து கொள்ளாவிட்டால், அது மக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close