[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக 16 ரயில்கள் ரத்து

cauvery-issue-trains-cancelled-diverted-as-farmers-stage-rail-roko

நாகையில் தொடர் ரயில் மறியல் காரணமாக நாகை-மயிலாடுதுறை-சீர்காழி மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக செந்தூர் அதிவிரைவு ரயிலும் வேறு மார்க்கமாக இயக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், எதிர்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கம்பன் எக்ஸ்ப்ரஸ், வேளாங்கன்னி - சென்னை விரைவு ரயில் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. முன்பதிவு செய்த முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ரயில் நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்பட 16 ரயில்கள் நேற்றும், இன்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில், சென்னையிலிருந்து ராமேஷ்வரம் செல்லும் ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் ‌மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. விவசாயிகளின் போராட்டம் காரணமாக செந்தூர் அதிவிரைவு ரயில் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டதால் அவதியடைந்த பயணிகள், விருத்தாசலத்தில் மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லவேண்டிய ரயில், விருத்தாசலம் மார்க்கமாக மாற்றி விடப்பட்டது.

ரயில்வே சார்பில் பேருந்து இயக்கப்படும் என்றும், பயணச்சீட்டுக்கு பணம் திரும்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் பயணிகள் ரயில் மறியல் செய்தனர். இதையடுத்து, அங்குவந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் நேற்றும், இன்றும், ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஸ்டாலின் மற்றும் திமுகவினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close