[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு

அதிமுக போன்ற பெரிய மக்கள் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: ஜெயலலிதா பேச்சு

jayalalithaa-speech-at-marriage-functions

அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக்கொடுக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் இல்லத் திருமண‌ விழாவில் கலந்து கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, புதுமணத் தம்பதியர்களை வாழ்த்தினார்.

அப்போது உரையாற்றிய அவர் அடுத்தவர் மகிழ்ச்சியில் தான் தம் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று புரிந்து வாழ்வதே இனிய இல்லறம் என்று அறிவுறுத்தினார். தமிழ் நாட்டின் நலன்கள் மீதோ, தமிழக மக்களின் நலன்கள் மீதோ அக்கறை இல்லாத எதிர்கட்சிகள் தான் பொய் பிரசாரங்களை மேற்கொள்வதாக விமர்சித்தார்.

அதிமுக போன்ற பெரிய மக்கள் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என உறுதி பட தெரிவித்த ஜெயலலிதா, அதிமுகவின் வளர்ச்சி பொறுக்காமல் எதிர்கட்சிகள் வசை பாடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close