[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

காவிரி விவகாரம்.. மத்திய அரசை கண்டித்து தமாகா ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

g-k-vasan-train-protest-for-cauvery-issue

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 18-ஆம் தேதி தனது தலைமையில் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம் ‌நடைபெற இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்காமல் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்து தடங்கலாக செயல்படுவதை கண்டித்தும் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம் ‌நடத்த உள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக நாளை மற்றும் நாளை மறுதினம் தொடர் ரயில் மறியல் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் நாளை மறுதினம் நடைபெறும் ரயில் மறியல் போராட்டம் தமது தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ள ஜி. கே வாசன், விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து பகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியலில் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close