[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

முதலமைச்சருக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை?

singapore-dr-treatment-to-cm-jayalalitaa

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகள் செய்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை சென்று கேட்டறிந்து வருகின்றனர்.

முதலமைச்சர் உடல்நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்து வருகிறது. அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களும் சென்னை வந்து முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close