முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் கடந்த 2-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 6-ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தக் கட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை மூன்றாவது முறையாக சென்னை வந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்போலோ மருத்துவமனைக்கு இன்று மாலை செல்வார் என்று கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரும் சென்னை வந்துள்ளனர். மருத்துவர் ரிச்சர்ட் பீலேவின் ஆலோசனையின் பேரில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.