[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

தாழ்த்தப்பட்டோர் கொலை: 4-ஆவது இடத்தில் தமிழகம்

50-murdered-in-tamilnadu-in-2015-ncrb

கடந்த ‌ஆண்டில் தமிழகத்தில் நடந்த குற்றச்செயல்களில் தாழ்த்தப்பட்டோர் 50 பேர் கொல்லப்பட்டதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2015-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான நடந்த குற்றச் செயல்களில் நாடு முழுவதும் மொத்தம் 729 பேர் கொல்லப்பட்டதாக புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 208 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 82 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பீகாரில் 80 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், தமிழகத்தில் 50 பேர் கொலை செய்யப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பட்டியலின்படி, வன்முறைச் சம்பவங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கொல்லப்பட்ட எண்ணிக்கையில் தமிழகம் நான்காவது இடம் வகிக்கிறது. இந்த இனத்தைச் சேர்ந்த 43 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தமிழகத்தில் வழக்குகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close