[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்

sri-lankan-navy-attacks-tn-fishermen

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பனைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாட்டுப்படகில் சென்ற 7 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மீன்களையும், மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். மேலும் ஜெபமணி என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் மீது இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close