[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க அமித்ஷா, அருண்ஜெட்லி சென்னை வந்தனர்

in-today-arunjetly-and-amithsha-visited-apollo

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22- தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்களும் அப்போலோ சென்று வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சரின் உ‌டல் நிலை குறித்து விசாரிப்பதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இன்று சென்னை வந்தனர்.

தற்போது வந்த அமித் ஷா மற்றும் அருண்ஜெட்லி விமானநிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல் நிலை குறித்து அறிய உள்ளனர்.

இதனிடையே, இதுதவிர இரு தலைவர்களுக்கும் சென்னையில் வேறு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னதாக, அக்டோபர் 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்பல்லோவுக்கு வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றது குறிப்பிடதக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close