[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நெல் மற்றும் பச்சரிசியில் அகர எழுத்துக்களை எழுத பழகிய குழந்தைகள் !

childrens-start-thier-studies-in-vijayatasami

விஜயதசமியையொட்டி தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வித்யாரம்பம் எனப்படும் ‘ஏடு தொடங்குதல்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விஜய தசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும். இந்த நாளில் தான் குழந்தைகள் ஆரம்பக்கல்வியில் அடியெடுத்து வைப்பர். இதற்காக இன்று அதிகாலை முதலே கோயில்களில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர், நெல் மற்றும் பச்சரிசியில் அகர எழுத்துக்களை தங்கள் குழந்தைக்கு எழுத கற்றுக் கொடுத்தனர். சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் குழந்தைகள் வரிசையாக அமர்ந்து அரிசியில் எழுதப் பழகினர்.

கோவையிலுள்ள சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் இன்று அதிகாலை முதலே பெற்றோர்கள் குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தியாவில் சரஸ்வதிக்கென உள்ள ஒரே கோயிலான கூத்தனூர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் குழந்தைகளுக்கு அரிசியில் எழுத கற்றுக் கொடுத்தனர். இதேபோல் திருவையாறிலுள்ள ஒளவையார் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close