[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

முதலமைச்சர் நலம் பெறும் வரை மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஏற்பாடுகள் தேவை: கருணாநிதி

karunanidhi-demand-alternative-arrangement-for-jayalalithaa

முதலமைச்சர் ஜெயல‌லிதா நலம் பெற்று பணியை தொடர்கின்ற வரையில், மக்களின் அவசரத் தேவைகள் நிறைவேற, உரிய ஏற்பாடுகள் செய்‌‌ய வேண்டும் என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் அலுவலகத்திலும், மற்ற அமைச்சர்கள் ‌அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான கோப்புகள் முடிவினை எதிர்பார்த்து தேங்கிக் கிடப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காவிரி போன்ற மிக முக்கியமான பிரச்னையில், முதல்வரிடம் கலந்து கொள்ளாமல், எந்த முடிவும் எடுக்க அமைச்சர்களோ, தலைமைச் செயலாளரோ தயாராக இல்லாத காரணத்தால், ஒரு செயலற்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து தலைவர்கள் தனித் தனியாக அறிக்கைகளை கொடுத்து வருவதாகவும், அதுபற்றியெல்லாம் முடிவெடுத்து, அரசின் நிலையை அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி மத்திய அரசோ, தமிழக ஆளுநரோ முடிவெடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். எனவே, முதலமைச‌சர் நலம் பெற்று தன்னுடைய பணியை தொடர்கின்ற வரையில், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட, தீர்க்கப்பட உரிய ஏற்பாடுகள் முறைப்படி, சட்டப்படி எடுக்கப்பட வேண்டும் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close