[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

முதலமைச்சர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது

two-arrested-over-spreading-rumor-about-jaya-s-health

முதலமைச்சர் உடல்நிலை குறித்து தவறாக வதந்தி பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், முகநூலில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், ராஜ்கமல் என்பவர் அளித்த புகாரின் பேரில், முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் பணியாளர் பேசுவது போல் பேசி அதனை வளைதளத்தில் வெளியிட்ட, மதுரையைச் சேர்ந்த மாடசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோன்ற வதந்திகளை முகநூல், டிவிட்டர், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்த குற்றத்திற்காக 43 வழக்குகளை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்குவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்காகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களையும், வதந்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், அதனை பிறருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close