[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

முதல்வர் உடல்நிலை குறித்து பேச நான் டாக்டர் அல்ல: திருநாவுக்கரசர்

thirunavukkarasar-prees-meet-at-chennai

முதலமைச்சர் உடல்நிலை குறித்து பேச நானும், ஆளுநரும் மருத்துவர்கள் அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஆளுநருடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று குறிப்பிட்டார். இதில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்தோ, மாநில நிர்வாகம் குறித்தோ பேசவில்லை என்றார். முதலமைச்சர் உடல்நிலை குறித்துப் பேசுவதற்கு தாமும், ஆளுநரும் மருத்துவர்கள் அல்ல என்று கூறிய அவர், ராகுல் காந்தியின் சென்னை வருகையில் எந்தவித அரசியலும் இல்லை என்றார். மேலும், திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், ஸ்டாலின் கூறிய கருத்தோடு ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தை காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்துள்ள நிலையில், அரசின் நிர்வாகம் சீராக செயல்பட பொறுப்பு முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில், துணை முதலவரையாவது நியமிக்க வேண்டும் என்றார். அதே சமயத்தில் தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close