[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

மேட்டூர், பவானி சாகர் அணைகளில் காவிரி உயர்மட்டக் குழு இன்று ஆய்வு

centre-team-to-inspect-mettur-pavani-sagar-dam-today

காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி உயர்மட்டக் குழு மேட்டூர் மற்றும் பவானி சாகர் அணைகளை இன்று ஆய்வு செய்கிறது.

இதற்காக மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான குழு சேலம் வந்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு சேலம் வந்த அந்தக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் சம்பத் வரவேற்றார். 14 பேர் கொண்ட அந்தக் குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் மேட்டூர் அணையை பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்த் தேவை ஆகியவை குறித்து அவர்கள் ஆராய்வார்கள். மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள், விளைவிக்கப்படும் பயிர்கள், விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் எனத் தெரிகிறது. இதனையடுத்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் உயர் தொழில்நுட்பக் குழுவினர், பவானி அணையையும் ஆய்வு செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் காவிரி உயர்மட்டக் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது. ஆய்வுகளை முடித்த பின்னர் டெல்லிக்கு நாளை செல்லும் இந்த குழு, இதுகுறித்த அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்கிறார்கள்.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,715 கன அடியில் இருந்து 2,799 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.01 அடியாகவும், நீர் இருப்பு 33.57 டி.எம்.சி-யாகவும் இருக்கிறது. பாசனத்துக்காக அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close