[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக 5 கோடி ரூபாயில் விடுதிக் கட்டிடம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

jayalalithaa-inaugurated-hostel-building-for-world-tamil-research-center

சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சுமார் 3 கோடி ருபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் புலக் கட்டடத்தையும், மதுரை தல்லாகுளத்தில் நிரந்தர சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

குமரி மாவட்டம் களியக்காவிளையில் மொழிப் போர் தியாகி சிதம்பரநாதன் சிலை, சுசீந்திரத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிலை ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் மொழிப்போர் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமி சிலை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலை ஆகியற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் உயர் கோபுர மின் விளக்கு, பயணிகள் நிழற்குடை ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close