[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

நடுக்கடலில் தமிழக மீனவரிடன் படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

sri-lankan-navy-attacks-tn-fishermen

கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவரின் படகை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்தனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் அதிகமான படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையின் 4 ரோந்து கப்பல்கள் அங்கு வந்துள்ள. அங்கே தமிழக மீனவர்களை கண்ட இலங்கை ரோந்துப் படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால், நள்ளிரவே சில மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். தொடர்ந்து இன்று அதிகாலையும் ரோந்துப் படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது மோதியுள்ளனர். இதில், அந்தோணி க்ரூஸ் என்பவரின் படகு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இந்தத் தாக்குதலால் 100-க்கும் அதிகமான படகுகளில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close