[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு

tn-local-body-polls-tn-election-commission-appeal-to-high-court

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் ‘உள்ளாட்சித் தேர்தலில்’ எஸ்.டி. பிரிவு மக்களுக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், ‘உள்ளாட்சித் தேர்தல்’ தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார. மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close