[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

கர்நாடக அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

karnataka-releases-10-cusesecs-water-from-dams

கர்நாடகா அணைகளிலிருந்து அந்த மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக ‌சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 6,500 கனஅடி தமிழகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் 6 ஆயிரத்து 865 கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தமிழகத்தை வந்தடையும் என தெரிகிறது. கபினி அணையில் 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 500 கனஅடி தமிழகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடத்தப்பட்ட கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், தங்களது மாநிலத் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதற்காக பிரதமர் மோடிக்கு கர்நாடக பேரவையில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close