[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்போலோ மருத்துவமனை தகவல்

cm-jaya-s-health-continues-to-improve-says-medical-bulletin

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்போலோ நிர்வாகம் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிருமித் தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதனால் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close