[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வைகோ வலியுறுத்தல்

vaiko-urges-to-setup-cauvery-management-board-immediately

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அமைச்சர்களே அலட்சியப்படுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் சதானந்த கவுடா உள்ளிட்ட 3 மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு பற்றி உபதேசம் செய்யும் பிரதமர் மோடி, அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் கர்நாடக அரசுடன் மத்திய அமைச்சர்கள் கைகோர்த்து நிற்பதை அனுமதிப்பது ஏன் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையை சட்டப்பூர்வமாக தீர்க்க, காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close