[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

சம்பா சாகுபடிக்கான நீர் வழங்கப்பட மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க கருணாநிதி வலியுறுத்தல்

samba-cultivation-karunanidhi-demand-central-and-state-govt-co-operation

காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கான நீர் வழங்கப்பட மத்திய-மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நர்மதை நதி, கிருஷ்ணா நதி, பக்ராநங்கல் அணை நீரை இரண்டு- மூன்று மாநிலங்கள் அனுசரித்து இணக்கமான முறையில் பகிர்ந்து கொள்வதாய் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில், தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் காவிரி நதி நீரை பகிர்ந்து கொண்டு சமாதானமான முறையில் சக வாழ்வு நடத்துவதில் என்ன பிரச்னை எழ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம், கர்நாடக மக்கள் இடையேயான சகோதரத்துவத்திற்கு எவ்வித ஊனமும் ஏற்படாதவாறு பிரச்னை சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close