[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை

5-tn-arrested-in-bahrain-relations-demand-to-rescue

பக்ரைன் நாட்டில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டட்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் கிராமத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடந்த மாதம் மீன்பிடி தொழிலுக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளனர். கத்தார் கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இவர்களை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.

25 நாட்களாக இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சிறையில் வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டும் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close