[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அக்.4-க்குள் அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

cauvery-water-board-should-be-set-up-within-3-days-rules-sc

காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் செவ்வாய்கிழமைக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம் பெறுபவர்களின் பெயர் பரிந்துரைகளை நாளை மாலை நான்கு மணிக்குள், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் அமர்வு அறிவுறுத்தியது.அதனை அடிப்படையாக வைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மூன்று நாட்களுக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,இன்றைய உத்தரவு குறித்தும், பெயர் பரிந்துரைகளை கொடுக்குமாறு நான்கு மாநிலங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், காவிரியில் தமிழகத்திற்கு நாளை முதல் ஆறாம் தேதி வரை வினாடிக்கு ஆறாயிரம் கன அடி நீர் திறந்துவிடவும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் அமர்வு உத்தரவிட்டது.முன்னதாக, வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற இரு மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்த அறிக்கையை, உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி அளித்தார். அதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க இயலாத நிலை குறித்து கர்நாடக முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் நகலை, அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close