தெற்கு ரயில்வேயின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணையில் சில ரயில்களின் பயண தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் புறப்படும் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் புதிதாக இயக்கப்படும் ஆறு புதிய ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு...
* சென்னை -அகமதாபாத் இடையே புதன்கிழமை தோறும் ஹம்சபர் விரைவு ரயில்
* அகமதாபாத்-சென்னைக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட ஹம்சஃபர் விரைவு
* திருச்சி - ஸ்ரீகங்காநகர் இடையே வியாழக்கிழமை தோறும் ஹம்சபர் விரைவு ரயில்
* கோவை - பெங்களூரு இடையே டபுள் டக்கர் உதய் விரைவு ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்
* சென்னை - சந்திரகாஜி இடையே புதன்கிழமைகளில் அந்யோத்யா விரைவு ரயில்
* எர்ணாகுளத்திலிருந்து - ஹவுராவுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஜோலார்பேட்டை வழியாக செவ்வாய்கிழமைதோறும் அந்யோத்யா விரைவு ரயில்
* எர்ணாகுளத்திலிருந்து கோவை, சேலம், காட்பாடி வழியாக ஹட்டியா வரையில் திங்கட்கிழமை தோறும் அதிவிரைவு ரயில்
* காக்கிநாடா - எழும்பூர் சிர்கார் விரைவு ரயில், காச்சிகுடா - எழும்பூர் விரைவு ரயில் ஆகியவை செங்கல்பட்டு வரை நீட்டிப்பு
ஏற்கனவே இயக்கப்படும் 8 ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரயில்வே கால அட்டவணை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே தலைமை செயல் அதிகாரி அனந்த ராமன் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
பரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி!
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !