[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !

new-timetable-announced-in-southern-railway

புதிய ரயில்வே கால அட்டவணையில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.

புதிய ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி இன்று வெளியிட்டார். இதில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், கூப்ளி, ஜோத்பூர் ஆகிய விரைவு ரயில்கள் அதி விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.

வேகம் அதிகரிப்பால் சென்னை எழும்பூர்- மானாமதுரை சிலம்பு விரைவு ரயில் பயண நேரம் 90 நிமிடங்களும், சென்னை- ஜோத்பூர் விரைவு ரயில்களின் பயண நேரம் 55 நிமிடங்களும், தஞ்சை-சென்னை உழவன் ரயில், சென்னை-ராமேஸ்வரம் ரயில் பயண நேரம் 90 நிமிடங்களும், ஹவுரா-குமரி ரயில், குருவாயூர்-சென்னை, தூத்துக்குடி-சென்னை ரயில் நேரம் 55 நிமிடங்களும் பயண நேரம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார். இத்துடன் ஹம்சபேர், அந்தியோதயா, உதய் விரைவு ரயில் உட்பட 6 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பத்து ரயில்கள் வந்து சேரும் நேரங்களும், ஆறு ரயில்கள் புறப்படும் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த நேர மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூ‌றப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close