[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கெயில் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உறுதி: கனிமொழி

gail-talks-with-the-tamil-nadu-government-in-the-case-kanimozhi

கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் தாம் எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் அனுப்பிருப்பதாக கனிமொழி கூறியுள்ளார். கெயில் எரிவாயு திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பண இழப்பும் ஏற்படாது என்று பிரதான் கூறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களுக்குப் பதிலாக நெடுஞ்சாலைக‌ள் வழியாக உயர் அழுத்த எரிவாயுக் குழாய்களைக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்று பிரதான் கூறியுள்ளார்.

விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கும் திட்டத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அதிகாரிகளும், கெயில் நிறுவன அதிகாரிகளும் தமிழக அரசுடன் கலந்து பேசி, சுமூக தீர்வை எட்ட இருப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close