[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பிரேத பரிசோதனை விவகாரம்: ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி

ramkumar-death-sc-dismisses-petition-filed-by-ramkumar-s-father

சுவாதி வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராம்குமார் சிறையில் மின்கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனையி‌ல் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரணை செய்ய வேண்டிய தேவையில்லை கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற‌ம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close