[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி போனஸ் அறிவிப்பு

20-diwali-bonus-for-tamil-nadu-psu-employees

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், பொதுத் துறை நிறுவனங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு சங்கங்கள், குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்களுக்கும் போனஸ் அளிக்கப்படவுள்ளது. தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும், 11.67 சதவிகித கருணைத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. போனசுக்கான சம்பள வரம்பும் 10,000 ரூபாயில் இருந்து 21,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close