[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக, கர்நாடக அரசுகள் மனு

karnataka-moves-sc-to-modify-order-on-release-of-cauvery-water

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு உச்சநீ‌திமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதேவேளையில், கர்நாடக அரசின் திருத்தம் கோரிய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கடந்த 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்த இயலவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. கர்நாடகாவில் குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு நீர் திறக்கப்படவில்லை என கூறியுள்ள கர்நாடக அரசு, ‌ தற்போது திறக்கப்பட வேண்டிய நீரை டிசம்பர் இறுதிக்குள் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் குறைவான மழைப்பொழிவு இருப்பதால் நீர் திறந்துவிட இயலாத சூழலில் இருப்பதாகவும் கர்நாடகா தனது மனுவில் கூறியுள்ளது.

அதேவேளையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரியில் நீர் திறந்துவிட வலியுறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என்று கூறியுள்ளது. ஆகையால், கர்நாடக அரசின் இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

உச்சநீதிமன்ற நீதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 27 வரை 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடாகாவுக்கு உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வார காலத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close