[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

கல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

water-from-kallanai-dam-today

டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து ‌கல்லணையில் இன்று நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூருக்கு கடந்த 15 நாட்களாக காவிரி நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், மேட்டுர் அணையில் இருந்து கடந்த 20-ம் தேதி ஒரு போக சம்பா சாகுபடிக்கு 12 கன அடி வீதம் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

இந்த நீர் கல்லணை வந்ததை அடுத்து, இன்று காலை 11 மணிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் தஞ்சை, திருவாருர், நாகை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். நீர் திறக்கப்படுவதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என் மாவட்ட நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close