[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

12,500 பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

12-500-women-wedding-funded-project

நடப்பு நிதியாண்டில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குவதை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி நடப்பு ஆண்டில் 12 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. அதன் அடையாளமாக ஆர்.கே. நகர் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு தலைமைச் செயலகத்தில் காசோலை மற்றும்‌ தாலிக்கு தங்கம் ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார். இளநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு தங்கமும் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. படித்த ஏழைப் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபா‌யும் தங்கமும் பெற நடப்பு ஆண்டில் 12 ஆயிரத்து 500 ஏழைப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close