[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

ராம்குமாரின் கடைசி நிமிடங்கள்... நடந்தது என்ன...எப்ஐஆரில் கூறப்படும் புதிய தகவல்கள்...

ramkumar-committed-suicide-fir-information

ராம் குமார் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கை புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. இதில் ராம்குமாரின் கடைசி நிமிடங்கள் நிகழ்ந்தவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி மாலை 4.30 மணியளவில் ராம்குமார் தண்ணீர் குடிப்பதற்காக கதவை திறந்துவிட காவலரிடம் கோரியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தொகுதி காவலர் பேச்சிமுத்து கதவை திறந்து விட்டதாகவும் வெளியே வந்த ராம் குமார் தண்ணீர் குடம் அருகிலிருந்த சுவிட்ச் பாக்சை கையால் உடைத்து அதிலிருந்த மின் ஓயரை வெளியே இழுத்து வாயால் ‌கடித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து காவலர்கள் லத்தியை கொண்டு ராம்குமாரை மீட்க முயற்சி செய்த அதே நேரத்தில் மெயின் சுவிட்ச் அணைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி மயங்கிய ரா‌ம்குமாருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின‌னர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் வழியிலேயே ராம்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close