[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகார அமைப்பு: விரிவான விளக்கம்

roles-and-responsiblities-of-cauvery-water-board

காவிரி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மேலாண்மை வாரியத்தின் அதிகார அமைப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழகம்-கர்நாடகா இடையே நீர்ப் பங்கீட்டிற்காக அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தலைவர் மற்றும் 2 முழுநேர உறுப்பினர்களை மத்திய அரசே நியமிக்கும். முழு நேர தலைவராக நியமிக்கப்படுபவர், முதன்மைப் பொறியாளர் தகுதி மற்றும் நீர்ப்பாசனத்துறையில் 20 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முழுநேர உறுப்பினர்களில் ஒருவர், அணைகளின் செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்ற நீர்ப்பாசன பொறியாளராகவும் மற்றொருவர் வேளாண்மை வல்லுநராகவும் இருக்க வேண்டியது கட்டாயம்.

இவர்கள் தவிர மேலும் 2 பேர் பகுதிநேர உறுப்பினர்களாக மத்திய அரசால் நியமிக்கப்படுவர். அதேநேரத்தில் காவிரி நீர் தொடர்புடைய தமிழகம்,கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒரு பிரதிநிதி, மேலாண்மை வாரியத்திற்கு நியமிக்கப்படுவர். நீர்ப்பாசனம், நீர்வளம் அல்லது பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இவர்கள், முதன்மைப் பொறியாளர் தகுதிக்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தின் செயலாளராக, சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சாராத நீர்ப்பாசனத்துறை பொறியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் ஆறு உறுப்பினர்கள் இருந்தால் கூட்டம் நடத்தலாம். ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்க அதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கவேண்டியது கட்டாயம். போதிய அளவு உறுப்பினர்கள் பங்கேற்காத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டால், அதற்கடுத்த 3 நாட்களுக்குள் கூட்டத்தை மீண்டும் கூட்டவேண்டும். அதில் முக்கிய முடிவுகளை எடுக்க பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமல்ல.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close