[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

பசியைப் போக்கும் மாமனிதர்கள்... தமிழக - கர்நாடக எல்லையில் உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

tn-karnataka-border-volunteers-provide-food

காவிரி பிரச்னையால் தமிழக - கர்நாடக எல்லையான ஜூஜூவாடி பகுதியில், பசியால் வாடும் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் தன்னார்வலர்கள் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், தன்னார்வலர்களின் இந்த மனிதாபிமானம், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

காவிரி பிரச்னையில் தமிழக - கர்நாடகா இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலிருந்து வேலை, கல்வி மற்றும் மருத்துவ தேவைக்காக பெங்களூரு செல்பவர்கள் உணவு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஜூஜூவாடி பகுதி கிராம மக்கள், தங்களின் சொந்த செலவில் இலவசமாக உணவு வழங்கி சேவை செய்கின்றனர். கடந்த 6 நாட்களாக, தினமும் 200 கிலோ அரிசியில், வெஜிடபிள் பிரியாணி உட்பட விதவிதமான உணவு வகைகளை செய்து தன்னலம் கருதாது வழங்கி வருகின்றனர்.

பெங்களூரில் கடைகள் இல்லாததால் பசியுடன் வேதனை அனுபவித்து வரும் தங்களுக்கு ஜூஜூவாடி கிராம மக்கள் அளிப்பது உணவு மட்டும் அல்ல அன்பையும் சேர்த்துதான் என்கின்றனர் அங்கிருந்து வரும் தமிழர்கள். இந்த உணவை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்கி சகோதரத்துவத்தை பறை சாற்றுகின்றனர் ஜூஜூவாடி பகுதி தன்னார்வலர்கள்.

காவிரி பிரச்னையில் தமிழகம் கர்நாடகா இடையே பரஸ்பர சமாதானம் ஏற்பட்டு மீண்டும் அமைதி தழைக்க வேண்டும் என்பதே எல்லைப்பகுதி மக்களின் விருப்பம். அதுவரை, சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக தினமும் உணவு வழங்க உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close