[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு: 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்

cauvery-waters-released-from-mettur-reservoir

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா பாசன வசதிக்காக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 16-ல் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் கருப்பண்ணன் ஆகிய 5 தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர் தூவி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டனர். இதன்மூலம் 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அளவு படிப்படியாக 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close