JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழ்நாடு 15 Sep, 2016 10:15 AM

சிறையிலுள்ள தமக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும்... முதலமைச்சருக்கு பேரறிவாளன் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தமக்கு பரோல் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பரோல் கேட்டு விண்ணப்பித்து தமது தாயார் கடந்த 8 மாதங்களாக காத்திருப்பதாக பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு பரோல் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், சிறையில் தாக்குதலுக்குப் பிறகு மெல்ல உடல்நலம் தேறி‌ வருவதாகவும் ஆனால் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ ‌சிகிச்சை பற்றிய கேள்விக்கு, சொந்த செலவில் தனியார் மருத்துவமனையிலோ‌, சென்னை அரசு பொது மருத்துவமனையிலோ சிகிச்சை பெற விரும்புவதாக பேரறிவாளன் கூறியுள்ளார். மேலும் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அரசிடம் எதிர்பார்ப்பதாகவும், பரோலில் விடுவித்தால் தனக்கு மட்டுமின்றி தனது தந்தையின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய இயலும் என்றும் பேரறிவாளன் தெரிவி‌த்துள்ளார்

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads