[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை கோயம்பேட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

buses-to-karnataka-stopped-in-koyambedu

சென்னை கோயம்பேட்டிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து பணிமனையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக போக்குவரத்துக்கழக பேருந்துகளும் பணிமனையிலேயே இருப்பதால், பாதுகாப்பிற்காக அங்கு காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.200-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் இருந்து காய்கறிகளுடன் வழக்கம் போல வாகனங்கள் வந்து செல்கின்றன‌. இதற்கிடையில், நேற்று கர்நாடகாவில் எரிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அம்மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று ஆம்னி பேருந்து சம்மேளனத்தின் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close