[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

tn-cm-jayalalithaa-letter-to-karnataka-cm

கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் தமிழகத்‌திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகா மாநிலத்தின் பல இடங்களில் பரவி வரும் வன்முறை தமக்கு கவலை அளிப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கன்னடம் பேசும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதையும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த 40 பேருந்துகளும், 45 லாரிகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருப்பதையும், மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் எந்த ஊறும் நேராத வகையில் உரிய பாதுகாப்பை வழங்க உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் கேட‌டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close