[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

பரம்பிக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மீது கேரளா போலீசார் தடியடி

kerala-forest-department-lathicharge-on-pwd-officers

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையில் ஆய்வுக்குச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கேரளா போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரளா எல்லையில் தமிழகத்துக்குச் சொந்தமான பரம்பிக்குளம் அணை உள்ளது. பரம்பிக்குளத்தின் அணை பரமாரிப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

பரம்பிக்குளம் அணைப் பகுதி மக்கள் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அந்த பகுதி குழந்தைகளின் படிப்பிற்காக பள்ளி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப் பணித்துறை சார்பில் இயக்கப்பட்டுவந்த பேருந்துக்கு அனுமதி வழங்க முடியாது என கேரள பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் ரஜ்சன்குமார் தெரிவித்து விட்டார். இதனால் இன்று நடைபெற்ற காலாண்டு தேர்வை 22 குழந்தைகளும் எழுத முடியாமல் போனது.

இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பரம்பிக்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த பரம்பிக்குளம் கேரள போலீசார் பொதுமக்களிடம் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், கேரள போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆவேசமான கேரள போலீசார் பொதுமக்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் அங்கு நின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருணாகரன், குமார், தியாகராஜன் மீதும் கேரள போலீசார் தடியடி நடத்தினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது கேரள போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close