[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

சதாப்தி ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

bomb-threat-to-shatabdi-express

சதாப்தி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே துறையின் ட்விட்டர் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபரால் பதிவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னையில் இருந்து புறப்படும் சதாப்தி ரயில்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை புறப்பட்ட மைசூர், கோவை மற்றும் விஜயவாடா செல்லும் சதாப்தி ரயில்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.mசோதனையடுத்து ரயில்கள் புறப்‌பட்டு சென்றன.

ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன் தலைமையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ‌இன்று மாலை புறப்படும் சதாப்தி ரயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள சதாப்தி ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close