[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கட்சி சார்பற்ற நபர்களையே வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

election-commission-new-terms-for-polling-officer-appointment

கட்சி பாகுபாடின்றி செயல்படுபவராகவும், அப்பகுதியை சேராதவராகவும் உள்ளவர்களையே வாக்குபதிவு அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பணியாளர்கள், அலுவலர்கள், அந்தப்பகுதி உள்ளாட்சி அமைப்பை சேராதவராகவும், பேரூராட்சி, நகராட்சியில் பணிபுரிபவர்களையும் அப்பகுதியில் வசிப்பவர்களையும் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கக்கூடாது என மாநில தேர்‌ல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் உறவினராக இல்லாதவரையும், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைகளில் உட்படாதவரையும் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்க அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், பெண் வாக்காளர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகளில் இரண்டு பெண் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிகளின்படி இப்பணிக்காக உள்ளாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசை சார்ந்த நிறுவனங்கள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை அலுவலர்களாக நியமிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close