[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கர்நாடகா செல்லும் பேருந்துகள் 5-ஆவது நாளாக நிறுத்தம்..எல்லைப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

karnataka-is-the-5th-day-of-protest

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் 5-ஆவது நாளாக இன்றும் எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருமாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படாததால் எல்லை பகுதியில் குடியிருப்பவர்கள் பல கிலோ மீட்டர் நடந்தும் பிற வாகனங்களிலும் கடக்கின்றனர்.

இதேபோல் கூடலூர் அருகே உள்ள எல்லைப் பகுதியான கக்கநல்லாவிலும் தமிழக, கர்நாடக மற்றும் கேரளா வாகனங்கள் இயக்கப்படாததால் மூன்று மாநில போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்‌சாவடியிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான தலமலை வழியாக கர்நாடக எல்லையான தாளவாடிக்கு சென்று வருகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close