[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

who-is-next-dgp-of-tamil-nadu

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த அசோக்குமார் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அடுத்த டிஜிபி யார் என்‌ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரில் ஒருவர் அடுத்த டிஜிபியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ஜார்ஜ், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன், அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை பயிற்சிப் பள்ளியின் இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் டிஜிபி-க்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.

அசோக்குமார் தீடீரென விருப்ப ஓய்வு பெற்றதால் இவர்களில் யாரேனும் ஒருவர் தற்காலிக டிஜிபியாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 4 அதிகாரிகளில் 3 பேரின் பெயர் மத்திய தேர்வு வாரியத்திற்கு அனுப்பியபின், முறையான ஒப்புதல் பெறப்பட்டு புதிய டிஜிபி நியமிக்கப்படுவார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close