[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது கர்நாடகா: கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் தண்ணீர் திறப்பு

water-opened-from-karnataka

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் பெங்களூருவில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.

அணைகளில் நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணராஜசாகர் அணை அருகே தீப்பந்தகளுடன் போராட்டம் நடத்திய கர்நாடக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இரு அணைகளிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close