[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பாதுகாக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக கருணாநிதி குற்றச்சாட்டு

dmk-chief-m-karunanidhi-slam-g-o

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பாரபட்சமான பாதுகாப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளதாக, தி.மு.க தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும்‌ அறிக்கையில்,

கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, அவர்கள் மீது எந்த லஞ்சப் புகார் வந்தாலும், அரசின் அனுமதி பெறாமல் வழக்குப் போட முடியாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், வேண்டப்படாதவர்கள் என்ற பாரபட்சமும், ஒரு தலைப்பட்சமான முடிவும் எடுக்க வாய்ப்புள்ளதாக மூத்த வழக்கறிஞர் கண்ணதாசன் கூறியிருப்பது, சரியானதாகத் தோன்றுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு கீழே பணியாற்றும் அலுவலர்களுக்குப் பாரபட்சமான பாதுகாப்பு அளிக்க அ.தி.மு.க அரசு அவசரம் அவசரமாக அரசாணைப் பிறப்பித்திருப்பதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே‌.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் புதிய அரசாணை, சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close