கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்து. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், காங்கேசன் துறைமுகத்திற்கு 8 கடல் மைல் தொலைவில் இநதிய நாட்டு படகும், இலங்கை படகும் நிற்பதையறிந்த விரைந்து சென்றனர். அப்போது தமிழக படகு இந்தியப் பகுதிக்குள் விரைந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் கொடுத்த தகவலின் பேரில், தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்ற கடற்படையினர், மணல் திட்டில் வீசி எறியப்பட்ட எட்டு பார்சல் கஞ்சாவை கைபற்றினர். படகையும் கடத்தல்காரர்களையும் பல மணி நேரம் ஹெலிகாப்டர் மூலம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல் வெளியாகியுளள்து. இதற்கிடையில் தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட 5.5 கிலோ தங்கத்தையும், பைபர் படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்