[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட்: கோவை அணியை வென்றது காஞ்சிபுரம்

tamil-nadu-premier-league

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோவை அணிக்கு எதிரான போட்டியில், காஞ்சிபுரம் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய காஞ்சி வாரியர்ஸ் அணியும், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்ததால், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் காஞ்சிபுரம் அணி 13 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் காஞ்சிபுரம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close