JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 04 Aug, 2016 07:13 AM

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேஸ் சதம் விளாசி, தமது அணியை தோல்வியில் இருந்து மீட்டார். இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்ததால், போட்டி டிராவில் முடிந்தது.

கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சிஸ் 196 ரன்களும், இந்திய அணி 500 ர‌‌ன்களும் எடுத்தன.‌ 304 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், பிளாக்வுட், டவ்ரிச் , ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அரைசதமும், ரோஸ்டன் சேஸ் சதமும் அடித்து வெஸ்ட் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்து, போட்டியை டிரா செய்தது. சேஸ் 137 ரன்களும், ஹோல்டர் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி வரை முயற்சித்தும், விக்கெட் வீழ்த்த முடியாததால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads