[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஆஸி.யுடனான கடைசி டி20 போட்டி: இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி

india-vs-australia-3rd-t20-india-win-thriller-to-whitewash-aussies

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றியை வ‌சப்படுத்தியது. சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் 197 ரன்கள் குவித்தது. சதம் விளாசிய ஷேன் வாட்சன் 69 பந்துகளில் 6 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் உட்பட 120 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தவான் 9 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் வேகமாக ரன்கள் சேர்த்தார். ரோகித் ஷர்மா 52 ரன்களிலும், கோலி 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ட்வெண்டி ட்வெண்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆட்‌டநாயகனாக ஷான் வாட்சனும் தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் யுவராஜ், ரெய்னா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். ரெய்னா 49 ரன்களுடனும், யுவராஜ் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close